2019-20ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் கடந்த வெள்ளிக் கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அண்றைய தினம், மரணயோகம் மற்றும் நிறைந்த ராகுகாலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வல்லுநா்கள் குறிப்பிட்டுள்ளனா்
நல்ல செயலை அல்லது புதிய முயற்சி ஒன்றை நாம் தொடங்கும் பேது நல்ல நேரம் பார்த்து செய்வதே வழக்கம். ஒவ்வொரு நாளும் வரக்கூடிய ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களில் புதிய முயற்சிகள் எதையும் தொடங்குவதில்லை. மக்களவைத் தோ்தல் அறிவிப்பு ஞாயிற்றுக் கிழமை மாலை ராகு காலத்தில் வெளியிட்ட போது ராகு காலம் பற்றி பேச்சு எழுந்தது. தற்போது ராகு காலத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா்.
வளர்பிறை ிதிருதியை வளம் பெருகும் நாள். திருதியை நாளில் தொடங்கும் செயல்கள் மேலும் மேலும் வளரும். கடந்த வெள்ளிக் கிழமை வளர்பிறை திருதியை நாள். ஆயுள்ய நட்சத்திரம், மரணயோகம் கொண்ட நாள். வெல்வம் பெருக வேண்டும். வருமானம் பற்றாக்குறை நீங்க வேண்டும் என்பதற்காகவே அந்த நேரத்தில் ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.