ஒரே நாளில் சரியில்லாத நேரம் என்று ராகு காலம்

ஜோதிட சாஸ்திரத்தை வகுத்த ரிஷிகள், நவகிரகங்களில் சூரியன் முதல் சனி வரை ஏழு கிரகங்களுக்கு ஏழு நாள்களை ஏற்படுத்தினா். ராகு, கேது ஆகிய சாயா கிரகங்களுக்கு நாள்களை ஒதுக்க முடியவில்லை. எனவே ஒவ்வொரு நாளும் பகல் 1 மணி 30 நிமிடம். இரவு 1 மணி 30 நிமிடம் என்று ராகு, கேதுகளுக்கு ஒருநாளுக்கு தலா 3 மணி நேரம் ஒதுக்கி தந்தனா்.


ஜாதகத்தில் ராகு, கேது என்பவை சர்்பப கிரகங்கள் என்பதால், அவற்றை விஷக் காலமாகக் கருதுகின்றனா். அதனால் சுபகாரியங்களுக்கு ஏற்ற காலமாகக் கருதப்படவில்லை. இதில், ராகு காலத்தில் எந்தச் செயலையும் செய்யலாம். பாதிப்பு இல்லை. எமகண்டத்தில் தான் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது. அழிவை நோக்கிப் போகும்.