சிறு நிறுவனங்களுக்கும் கடன் கொடுங்கள்!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான கடனுதவியை வங்கிகள் தாராளமாக வழங்க வேண்டும் என்று நிதியமைச்சகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டது சிறு நிறுவனங்கள் துறையைச் சேர்ந்தவர்கள்தான். தொடர்ந்து தொழில் புரியத் தேவையான நிதி இல்லாமல் சிறு நிறுவனங்கள் பல இழுத்து மூடப்பட்டன. வங்கிகளில் அதிகரிக்கும் கடன் மோசடிகள் காரணமாகக் கடன் வழங்குவதில் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன.