பெரிய நிறுவனங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், வங்கிகள் சிறு நிறுவனங்களுக்கும் கடன் வழங்க வேண்டும் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் வலியுறுத்தியுள்ளார். நவம்பர் 11ஆம் தேதி யூனியன் வங்கியின் 101ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட அனுராக் தாகூர் இவ்வாறு பேசினார்.
வாகன விற்பனையில் பரிதவிக்கும் இந்தியா!
மேலும், வங்கித் துறையின் வளர்ச்சி குறித்து அவர் பேசுகையில், “வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் 2018 மார்ச் மாதம் ரூ.10.36 லட்சம் கோடியாக இருந்த வங்கிகளின் வாராக் கடன் 2019 மார்ச் மாதம் ரூ.9.38 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.8.96 லட்சம் கோடியிலிருந்து ரூ.7.9 லட்சம் கோடியாகக் குறைந்திருக்கிறது” என்றார்.
பெரிய நிறுவனங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், வங்கிகள் சிறு நிறுவனங்களுக்கும் கடன் வழங்க வேண்டும்